000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a கௌமாரி |
300 | : | _ _ |a சாக்தம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a அன்னையர் எழுவர் தொகுதியில் மூன்றாவதாக அமர்ந்துள்ள கௌமாரன் நாயகி கௌமாரி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a புராணங்கள் கௌமாரியைப் பற்றிக் கூறுவதாவது- கௌமாரன் எனப்படும் முருகனின் பெண் அம்சமே கௌமாரி ஆவாள். கௌமாரி சிவப்பு நிற ஆடை அணிந்தவள். எட்டுத்திக்கிற்கும் உரியவள். இத்தேவி முருகனுக்குரிய, கரண்ட மகுடம், வஜ்ராயுதம், சக்திப்படை இவைகளை உடையவளாயிருப்பாள். இச்சிற்பத்தில் கௌமாரி கரண்ட மகுடம் தரித்தவராயும், பின்னிரு கைகளில் வஜ்ரப்படையையும், அக்கமாலையையும் பிடித்தவராயும் காணப்படுகிறார். நெற்றியில் கண்ணி மாலை விளங்குகிறது. முன் வலது கை அபய முத்திரையும், இடது முன் கை தொடையில் வைத்தவாறும், வலது காலை தொங்க விட்டும், இடது காலை மடக்கி பீடத்தின் மீது வைத்தவாறும் நல்லிருக்கையில் (சுகாசனம்) அமர்ந்துள்ளார். நீள்செவிகளில் பத்ர குண்டலங்களும், மார்பில் சன்ன வீரமும், கழுத்தில் கண்டிகை, சரப்பளி, சவடி, கைகளில் தோள்வளை, முன் வளைகள், விரல்களில் வளையங்கள் ஆகியன அணிந்துள்ளார். மார்பில் குஜபந்தம் என்னும் மார்புக் கச்சை அணிந்துள்ளார். இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய நீண்ட முழாடை முழங்காலுக்கு கீழ் வரை மடிப்புகளுடன் காட்டப்பட்டுள்ளது. கால்களில் சிலம்பும், சதங்கையும் அணி செய்கின்றன. இடைக்கட்டின் கடி பந்தம் முன் வளைந்து பீடத்தின் மீது விழுந்துள்ளது. இடைக்கட்டின் முடிச்சு வலது பின்புறம் தொடையில் காட்டப்பட்டுள்ளது. தேவியின் வலது மேற்புறம் கௌமாரியின் வாகனமான மயில் காட்டப்பட்டுள்ளது. |
653 | : | _ _ |a கௌமாரி, அன்னையர் எழுவர், சப்த மாதர், ஏழு கன்னியர், சப்தமாதர் தொகுதி, சப்த மாதர்கள், மலையடிப்பட்டி, புதுக்கோட்டை, சிவன் குடைவரை, புடைப்புச் சிற்பம், முற்காலப் பாண்டியர் சிற்பங்கள், பாண்டியர் கலைப்பாணி, பாண்டிய மண்டலம், பாண்டியர் குடைவரைகள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a மலையடிப்பட்டி சிவன் குடைவரைக் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மலையடிப்பட்டி |d புதுக்கோட்டை |f கீரனூர் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 10.65417098 |
915 | : | _ _ |a 78.89684021 |
995 | : | _ _ |a TVA_SCL_000481 |
barcode | : | TVA_SCL_000481 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |